கோரோனா காலத்தில் சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட கொடுப்பனவு – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்!

Wednesday, April 29th, 2020

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கம் பல்வேறு கொடுப்பனவுகளை வழங்க உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளயில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

மேலும் பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 3 மாதங்களுக்கு (15/3/2020 திகதி முதல்  15/06/2020 வரை விசேட இடர்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய

•      மத்திய மற்றும் மாகாண சுகாதார துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூபா 5 ஆயிரமும்

•      மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களுக்கு  ரூபா 5 ஆயிரமும்

•      மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை ஊழியர்களுக்கு  ரூபா 5 ஆயிரமும்

•      கிராம சேவகர் எரிபொருள் கொடுப்பனவு: ஒரு பிரிவை கண்காணிப்போருக்கு ரூபா 450 ம்   இரண்டு பிரிவை கண்காணிப்போருக்கு ரூபா 600. கிராம சேவகர் தொலைபேசி கொடுப்பனவாக ரூபா 600 வழங்கப்பட்டது, தற்போது அது ரூபா 1500 ஆக அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் கிராம சேவகர் போக்குவரத்து கொடுப்பனவு: ரூபா 600 வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்போது  அது ரூபா 1200 ஆக அதிகரிக்கப்படுகிறது.

கோரோனா வைரஸை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு கொடுப்பனவை வழங்க வேண்டும் பலர் பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததன் அடிப்படையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: