கோப் சிற்றிகளில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்த சிறப்புப்பிரிவுகள்!

Thursday, May 30th, 2019

கூட்டுறவு என்ற திட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள கோப்சிற்றிகளில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சிறப்புப்பிரிவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதற்கென சந்தையில் ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான தளபாடங்களை வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் வழங்கி வைத்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், வவுனியாவில் வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், மன்னாரில் மாந்தை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் பேன்றவற்றின் கோப் சிற்றிகள் இவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தப்படவும் உள்ளன. வடக்கு மாகாண உள்ளூர் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்திடம் இருந்து உள்ளூர் உற்பத்திப் பொருட்களை பெற்றே கோப் சிற்றிகளில் இவை காட்சிப்படுத்தப்படும்.

Related posts: