கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் ஒருவருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்பின் அவர் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
12 இலட்சத்து 34 ஆயிரத்து 521 பேர் வரட்சியால் பாதிப்பு!
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்...
அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் - பிரேசில் ஜனாதிபதி லூயி...
|
|