கோதுமை மா நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் பி.ஹெரிசன்!

Thursday, September 12th, 2019

கலந்துரையாடல் முடிவடையும் வரையில் கோதுமை மாவினை முன்னர் இருந்த விலையிலேயே விற்பனை செய்யுமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோதுமை மா நிறுவனங்கள் தங்களுக்கு அறிவிக்காமல் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா நிறுவனங்கள் கூறுவது போன்று டொலரின் விலை கடந்த வருடங்களில் அதிகரித்த போதும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதனால் அவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சட்ட ரீதியாக கோதுமை மா நிறுவனங்கள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: