கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

Saturday, March 12th, 2016

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பெருந்தோட்டபுற மக்கள் மத்தியில் கோதுமை மாவினையே அத்தியாவசியமான உணவாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது