கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அறிவிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
உணவு பொருட்களுக்கான அதிகபட்ச விலை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னிச்சையாக விலையினை அதிகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எதிர்வரும் நாட்களில் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமுர்த்தி கொடுப்பனவை மீளப் பெறும் விவகாரம்: அமைச்சர் திஸநாயக்காவுக்கு எதிராக மனு!
தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் இழப்பீடு
யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிச...
|
|