கோதுமையின் விலை குறையும்: அமைச்சர் மங்கள சமரவீர!

Wednesday, August 2nd, 2017

இறக்குமதி செய்யப்படும் மோதுமையின் அளவை அதிகரிக்கவுள்ளதாகவும், கோதுமையின் வரியினைக் குறைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் வரியினை 25 ரூபாயில் இருந்து 15 ரூபாவாக குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட மங்கள அதிகபடியான சில்லறை விலையினை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: