கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!
Friday, December 28th, 2018கோண்டாவில் ஐயப்பன் ஆலய வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமான யானைமீது ஐயப்ப சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்த நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.
கண்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட யானையில் கோண்டாவில் ஐயப்ப சுவாமிகள் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஊர்வலமாக யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளூடாக சென்று மக்களுக்கு அருளாசிகளை வழங்கிச் சென்றார்.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமிகளின் ஆருளாசிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே ஒவ்வொரு வருடமும் தென்னிலங்கையிலிருந்து யானை வருவிக்கப்பட்டு ஐயப்ப சவாமிகள் வீதியுலா செல்வது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|