கோண்டாவில் அமரகவி மாதர் சங்கதிதிற்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி வழங்கிவைப்பு!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கோண்டாவில் மேற்கு அமரகவி மாதர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான உதவித்திட்ட நிதியுதவி இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த மாதர் சங்கத்தினர் நல்லூர் பிரதேச ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளரிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிதி இன்றையதினம் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த மாதர்சங்க தலைவி திருமதி .வனிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதேச நிர்வாக சபை உறுப்பினர் இராசையா பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்கு இலங்கை வான்போக்குவரத்து பிரிவு!
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் - இத்தாலியில் வாழும் இல...
|
|