கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதிக்கு ஏற்பாடு!

Saturday, August 14th, 2021

கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு பகுதி மக்களுக்கான குடிநீர் வசதிக்கான தொகுதி புலம்பெயர்தேச அன்பர் நவரத்தினம் நமசிவாயத்தின் அனுசரணையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவனும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான நவரத்தினம் நமசிவாயம், தமது தாயார் நவரத்தினம் சரஸ்வதியின் நினைவாக இந்தத் தொகுதியை அன்பளிப்புச் செய்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் ஊடாக ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தவநாதனால் அடையாளப்படுத்தப்பட்ட, அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் கோணாவில் கிழக்கு இராஜன் குடியிருப்பு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த நிலையிலேயே குறித்த   குடிநீர்வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது

கடந்த வியாழக்கிழமை இந்த நீர்விநியோகத் தொகுதி அந்தப் பகுதி மக்களிடம், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் அவர்களால், இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் சார்பாக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அந்தப் பகுதி கிராமசேவையாளர் துஷ்யந்தன், முன்னாள் கிராமசேவையாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அக்கராயன் பிரதேச இணைப்பாளருமான சபாரத்தினம், விவசாயக்குழுத் தலைவர் நடராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டாரக்குழு உறுப்பினர் தில்லை ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கோணாவில் கிழக்குப் பிரதேச விளையாட்டுக்கழகத் தலைவரும், யாழ் பல்கலைக்கழக அறிவியல்நகர் வளாக வேலைத்தள மேற்பார்வையாளருமான சுதர்ஷன் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்து செயற்படுத்திக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: