கோட்டா கோ கம தாக்குதல் – முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

Friday, May 27th, 2022

கடந்த 9 ஆம் திகதி அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலுக்கு அருகாமையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலங்களைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை அடையாளம் காண ஆறு அடையாள அணிவகுப்புகள் நடத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நான்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - வர்த்த...
குவைத்தில், சட்டவிரோதமாக தொழில் புரிந்த 62 இலங்கையர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டனர்!
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் - வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!