கோட்டபாயவால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் – மஹிந்த ராஜபக்ஸ!

Tuesday, October 8th, 2019

நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இயலுமை உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.  சகோதரதுவத்தின் மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு வெலிகம நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வெலிகம பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த 10 வருடங்களாக சந்தேகமும், பயமின்றி வாழ்வதற்கு உரிமை காணப்பட்ட போதிலும் இன்றைய சூழ்நிலையில் அந்த உரிமை இல்லாது போயுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாய் மாறியுள்ளதால் மக்கள் தத்தமது சமயவழிபாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு என்பது தனியாக சிங்களவர்களின் பாதுகாப்பு மாத்திரம் என பொருள்படாது எனவும் அது முழு நாட்டினதும் பாதுகாப்பாகும் எனவும் கூறினார்.

குறிப்பாக இன்றைய நிலையில் கத்தோலிக்கர்கள் வெள்ளிக்கிழமை திருபலிக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.

தனது ஆட்சியில் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டபோது தானும், பாதுகாப்புச் செயலாளரும் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான நிலைமையை காணமுடியவில்லை எனவும் அவர் கூறினார்.

எனவே நாட்டை மீட்டு முன்னேற்ற வேண்டும் எனவும் அதனை முன்னெடுப்பதற்கு கோட்டாபயவால் முடியும் எனவும் அதற்கு தான் உத்தரவாதமளிப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: