கொஸ்கம பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு: எஸ்.எம். விக்ரமசிங்க!

Monday, June 6th, 2016

அவிசாவளை, கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் பாரிய தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீ விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் ஆறு முதல் ஏழு கிலோ மீற்றர் வரையிலான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் சொத்துக்களை பாதுகாக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்றிரவு முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: