கொவிட் – 19 புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவை – புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலை வெளியிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, January 14th, 2023

உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்-19 தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர், அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

அதேநேரம், அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஓடீடீ 1.5 என்ற ஒமிக்ரோன் வைரஸ் உப திரிபு, கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முறையாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.

தற்போதுவரை இந்தப் புதிய திரிபு, அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்-19 வழிகாட்டல் கோவையை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: