கொவிட் 19 : உலகம் முழுவதும் 663,740 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

Sunday, March 29th, 2020

உலகை அச்சுறுத்திவரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரசால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதுமட்டுமல்லாது உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

நோயை குணப்படுத்த தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய நாள் நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 663,740 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 லட்சத்து 90 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 25 ஆயிரத்து 207 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 142,183 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன் இந்த வைரசின் கோரத் தாண்டவத்தால் முதலாவது மரணம் இலங்கையிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: