கொவிட் பரவலை கட்டுப்படுத்த விரைவில் கொள்கை ரீதியான தீர்மானம் – சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு!

Thursday, June 17th, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே தொடர்ந்தும் பொதுமக்கள் வேண்டுமென்றே போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறினால் மேலும் இரண்டு வாரங்களிற்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: