கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சரிக்கை!

Thursday, November 4th, 2021

நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதா்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மக்கள் அடிப்படை சுகாதார விதிகளுக்கு இணங்க வில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தினமும் 500 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், மக்கள் சரியான சுகாதார விதிகளைப் பின்பற்றாவிட்டால், அந்த எண்ணிக்கை 1500 ஐ தாண்டுவதற்கு அதிக காலம் எடுக்காது என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளமை குறிப்டபிடத்தக்கது.

இதனிடையே

நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 08 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (03) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 806.ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 354 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 234 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: