கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் – தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி சுட்டிக்காட்டு!

Monday, August 23rd, 2021

எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் அடிப்படையில் 91 சதவீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டவர்களில் 8 சதவீதமானவர்கள் உயிரிழந்தனர். அதேநேரம், ஒரு சதவீதமானவர்களே இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.

எனவே, பொதுமக்கள் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளும் பட்சத்தில் மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: