கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் – சுகாதார அமைச்சு!

Sunday, May 30th, 2021

நாட்டில் நேற்றையதினத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 477 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 6 இலட்சத்து ஆயிரத்து 508 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் 512 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 805 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, 14 ஆயிரத்து 984 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:


உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் - இராஜாங்க அமைச்சர் ...
மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான...
வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் - பொதுஜன பெரமுன கட்சியின் பொத...