கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு 286 பில்லியன் ரூபா செலவு – அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Sunday, June 6th, 2021அரசாங்கம் இதுவரை பொது மக்களுக்கான நலன்புரி நோக்கங்கள் உள்ளிட்ட கோவிட் -19 தொடர்பான நடவடிக்கைகளில் 286 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு 5000 ரூபாய் மற்றும் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட தேவைகளுக்காக 130 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் 5000 ரூபா வழங்குவதற்கான முயற்சி வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 4 மில்லியன் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்க முடிந்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதனிடையே நாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களில் ஏற்பட்ட தவறுகள் அடையாளம் காணபட்டுள்ளன, எனவே எதிர்காலத்தில் தடுப்பூசி இயக்கத்தை மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போதே மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|