கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் – பொதுமக்களிடமிருந்து ஜனாதிபதிக்கு ஆலோசனை!

நான் கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக் கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டி தலதாமாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
அவ்வேளை இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட்டினால் இரண்டு வருடங்களை இழந்துள்ளீர்கள். சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் ஏன் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என கேள்வி எழுப்பினார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உங்களை எனது ஆலோசகராக்க வேண்டும் என நான் அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மக்களிற்கு எனது கஸ்டங்கள் குறித்து தெரிந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது - பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர் ஸ்...
குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு!
உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கும் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு!
|
|