கொழும்பு மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக ஆரம்பியுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!

கொழும்பு கோட்டையில் உள்ள மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் தலைமையில் குறித்த புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த நான்கரை வருடங்களாக புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் வர்த்தக சந்தை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இதனால் அங்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்த 80 வீதமான கடைகளை மூடுவதற்கு நேரிட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மிதக்கும் சந்தை அமைந்துள்ள ஏரியின் நீர் அசுத்தமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை உடனடியாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
|
|