கொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில்

Tuesday, May 23rd, 2017

பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ ஜெனிவாவில் இடம்பெறும் உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள, உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது மாநாட்டில் இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துகொள்ள உள்ளார்

இந்த மாநாட்டின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், அந்த மாநாட்டை தொடர்ந்து இடம்பெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்திலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: