கொழும்பு துறைமுகத்தில் சீன கிறேன்கள் தரையிறக்கம் – பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர் ஊழியர்கள்!

Friday, July 3rd, 2020

கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புக்குப் பின்னர் கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினர் தாம் முன்வைத்த முக்கிய கோரிக்கையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதன் பின்னர் இந்த முடிவுக்கு அவர்கள் வந்ததாகத் தெரிவித்தனர்

அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்று பளுதூக்கிகளையும் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் தரையிறங்கக் குறித்த கலந்துரையாடலில் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்நிலையில், இதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு துறைமுக அதிகார சபைக்கு பிரதமர் மஹிந்த அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: