கொழும்பு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் கார்கள்!

Thursday, September 29th, 2016
 
மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பாரிய அளவு மோட்டார் வாகனங்களுடன் “ஸ்ப்ரிங் ஸ்கை” என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இது மோட்டார் வாகன போக்குவரத்துக்கு (Car Carrier) மாத்திரமே பயன்படுத்தப்படும் கப்பலாகும்.165 மீட்டரை கொண்டுள்ள குறித்த கப்பல் இந்த வருடத்தினுள் வாகனங்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்த மிகப் பெரிய கப்பலாக கருதப்படுகின்றது.
இந்தியாவின் இனோரா துறைமுகத்தில் இருந்து வந்துள்ள இந்த கப்பல் மூலம் 1539 மோட்டார் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இலங்கை துறைமுக அதிகார சபை ECT பகுதியில் நங்கூரமிடப்படும் முதலாவது கப்பல் இதுவென இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு இயக்குனர் ஜயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: