கொழும்பு துறைமுகத்தில் இந்தியக் கடற்படை கப்பல் !

Tuesday, October 11th, 2016

இந்திய கடற்படைக்கு சொந்தமான “சமுத்ரா பஹரெடர்”  என்ற கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கப்பலின் கட்டளை தளபதியான டி.ஆர்,சர்மாவை, இலங்கை மேற்கு பிராந்தியத்திற்கான கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா மேற்கு பிராந்தியத்தின் தலைமையகத்துக்கு அழைத்து கலந்துரையாடவுள்ளதோடு, பயிற்சிகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31-B

Related posts: