கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது – இந்திய அரசாங்கம் கருதுவதாக டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவிப்பு!
Saturday, October 2nd, 2021இந்தியா கொழும்பு துறைமுகத்தில் பிரசன்னமாகயிருப்பதற்கு அனுமதிப்பதால் மேற்குகொள்கலன்முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது என இந்திய அரசாங்கம் கருதுகின்றது என டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்கபில் டைம்ஸ் ஒவ் இ;ந்தியா மேலும் தெரிவித்துள்ளதாவது –
ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையிலிருந்து இலங்கை விலகியமை குறித்த இந்தியாவின் ஏமாற்றம் நீடிக்கின்ற போதிலும் அதேதுறைமுகத்தில் இன்னொரு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அடானி குழுமத்துடன் இலங்கை 700 மில்லியன் டொலர் உடன்படிக்கையை செய்துகொண்டதை இந்தியா பயனுள்ள நடவடிக்கையாக பார்க்கின்றது.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் சிறிங்லாவின் விஜயத்திற்கு முன்னதாக வெளியான மேற்கு கொள்கலன் முனையம் குறித்த அறிவிப்பு – அதில் இந்திய அரசாங்கத்தின் நேரடி பங்களிப்பு இல்லாவிட்டாலும்- சீனா பல பாரிய திட்டங்களிற்கு நிதி வழங்கிவரும் இலங்கையின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தில் இந்தியாவின் பிரசன்னத்தை உறுதிசெய்கின்றது.
இலங்கை தனது நான்குநாள் விஜயத்தின் இலங்கையுடன் அரசியல்ரீதியில் மீளஈடுபாட்டை வெளிப்படுத்துவார் என்பதுடன் யாழ்ப்பாணத்திற்கும் அவர் விஜயம் மேற்கொள்வார்.
வெளிவிவகார செயலாளரின் விஜயம் எங்கள் இரு தரப்பு உறவுகள், முன்னெடு;க்கப்படும் இரு தரப்பு அபிவிருத்தி திட்டங்கள், கொவிட்டினால் உருவாகியுள்ள குழப்பநிலையை கையாள்வதற்காக இருநாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து மீளாய்வு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும் இந்திய அரசாங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்திய வெளிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுவுள்ளார்..
இரு நாடுகளிற்கும் இடையில் 1987 இல் செய்துகொள்ளப்பட்ட இரு தரப்பு உடன்படிக்கை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் எந்த துறைமுகத்தையும் வேறு எந்த நாட்டிற்கும் வழங்கமுடியாது என தெரிவிக்கின்றது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் 85 வீதத்தினை அதானி குழுமத்திற்கும் உள்ளுர் நிறுவனத்திற்கும் இலங்கை அனுமதித்துள்ளது.
கிழக்கு கொள்கலன்முனைய உடன்படிக்கை இந்தியாவிற்கும் ஜப்பானி;ற்கும் 49 வீதத்தினையே வழங்கியது. அந்தவகையில் இந்தியா கொழும்பு துறைமுகத்தில் பிரசன்னமாகயிருப்பதற்கு அனுமதிப்பதால் மேற்குகொள்கலன்முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது எனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|