கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022

இன்றையதினம், ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவற்றில், 75, 000 எரிவாயு கொள்கலன்கள், கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இம்மாதத்தில் இதுவரை 4 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், மேலும் 6 கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: