கொழும்பு சர்வதேச நிதி நகரம் – எதிர்கால இலங்கையின் செழிப்பில் ஓரு மகத்தான திருப்புமுனை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 21st, 2021

கொழும்பு துறைமுக நகரமானது எதிர்கால இலங்கையின் பொருளாதாரத்தை செழிப்படையச் செய்யும் ஒரு மகத்தான திருப்புமுனையாகவே இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச குறித்த துறைமுக நகர திட்டம் முன்னோக்கி நகர்வது ஒரு மகிழ்ச்சியான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்

கொழும்பு துறைமுக நகர (Colombo International Financial City) சிறப்பு பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலம் நாடாளுமன்றல் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் 91 பெரும்பான்மை வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 பிரதிநிதிகளின் வாக்குகளும், அதற்கு எதிராக 58 பிரதிநிதிகளின் வாக்குகளும் பதிவாகின.

எமது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

எமது நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினாலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களினாலும் – 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மேற்படி துறைமுக நகர திட்டம் முன்னோக்கி நகர்வது ஒரு மகிழ்ச்சியான விடயம்.

ஏனெனில் – கொழும்பு துறைமுக நகரமானது  எதிர்கால இலங்கையின் பொருளாதாரத்தை செழிப்படையச் செய்யும் ஒரு மகத்தான திருப்புமுனையாகவே இருக்கும்.

Related posts: