கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா ஆரம்பம்!

Saturday, June 3rd, 2017

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் காலை6.00 மணிக்குதிருப்பலியுடன் ஆரம்பமானவருடாந்தஉற்சவம் நவநாள் பூசைவழிபாடுகள் நாள்தோறும் மாலை 6.00 மணிக்குதமிழ் சிங்களமொழிகளில் நடைபெறும்.

எதிர்வரும் 13 ஆம் திகதிதிருவிழாதிருப்பலிகள் அதிகாலை 4.00 மணிமுதல் முறையேதமிழ்,சிங்களமொழிகளில் நடைபெறும் அதேவேளை,நண்பகல் 12.00 மணிக்கு இலங்கைக்கானவத்திக்கான் தூதுவர் பேராயர் பியார் நயுக்வென் வான் டொட் ஆண்டகைதலைமையில் ஆங்கிலமொழியில் நடைபெறும்.

தொடர்ந்துமாலை 5.00 மணிக்குபுனிதரின் திருச்சொரூபபவனிஆலயத்திலிருந்துஆரம்பமாகும்.

பவனியின் நிறைவில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் புனிதஅந்தோனியாரின் திருச்சொரூபஆசிவழங்கப்படுமென்றும், இவ்வருடாந்தஉற்வங்களின் போதுநாடெங்கிலுமிருந்துஅதிகளவானபக்தர்கள்  ஆலயத்திற்குவருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: