கொழும்பு கிராண்ட்பாஸில் கட்டடம்இடிந்து விழுந்துள்ளதில் மூவர் பலி!

Wednesday, February 14th, 2018

கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்ததுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடர் கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது

காயமடைந்தவர்களிர் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெறுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினருடன் 8 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: