கொழும்பில் ரேடர் வலையமைப்பை நிறுவுகிறது அமெரிக்கா!

Tuesday, May 2nd, 2017

கொழும்பில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் தொழில் நுட்பத்திறன் கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமரிக்க அமைக்கவுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிரித்தானிய தூதரகத்திற்குச் சொந்தமான 6 ஏக்கர் காணியை அமெரிக்க தூதரகம் கொள்வனவு செய்தள்ளது. அந்த இடத்தில் அமெரிக்க, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைக்கவுள்ளமையே அதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தொழில்நுட்ப ரேடார் வலையமைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற கருவிகள் பொருத்தப்பட்டு இந்தக் கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கொழும்பு துறைமுகம், கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் போன்ற கொழும்பின் முக்கிய வணிகப் பகுதியின் மையத்தில், இந்தக் கண்காணிப்பு அமையம் அமையவுள்ளமை குறித்து சீனாவும் இந்தியாவும் மிகவும் கவலையடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தை கண்காணிக்கும் ரேடர் வலையமைப்பை உருவாக்கினால் தாம் அது போன்ற மையங்களை அமைக்க இந்தியாவும் சீனாவும் திட்டமிட்டுள்ளன. அமெரிக்க தூதரக கொள்வனவு செய்யப்பட்ட காணிக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு அங்கிருந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டுமானங்கள் இலங்கையில் உள்ள ஏனைய தூதரகங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கண்காணிப்பு மைய கட்டுமானத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இருப்பதாக அமைச்சர்களிடம் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அமெரிக்கத் தூதரகம் கொள்வனவு செய்துள்ள காணியில் கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது பற்றி இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி அது பற்றி தாம் எதுவுமே அறியவில்லை என்றார் என்றுள்ளது.

Related posts: