கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் கவலைக்கிடம்!

Sunday, July 8th, 2018

கொழும்பு ஜம்பட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து  கவலைக்கிடமாக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கலலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச்செய்தியை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: