கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானம்!

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக சீஷெல்ஸ் நாடு கொழும்பில் உள்ள அதன் உயர்ஸ்தானிகராலயத்தை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கைக்கு ஒரு தூதரக அதிகாரியை நியமிக்க அனுமதி கோரி கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் கொன்ராட் வின்சென்ட் மெடெரிக் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கடிதமொன்றினை கையளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்துள்ளார். இதன்போதே இந்த கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சீஷெல்ஸ் மக்களுக்கான மருத்துவ சுற்றுலாவை மீண்டும் தொடங்குவதற்கு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தூதருக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு இரத்து!
நடுக்கடலில் கவிழ்ந்துள்ள படகு 90 பேர் உயிரிழப்பு - லிபியாவில் சோகம்!
|
|