கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்து விபத்து : 18 பேர் படுகாயம்!

Saturday, June 27th, 2020

வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.

எதிரில் வந்த பாரஊர்தியுடன் ஏற்படவிருந்த விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: