கொழும்பில் இந்திய கப்பல்கள் துறைமுகத்தில்

இந்தியாவின் மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக நேற்று(15) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
இந்திய கடற்படையினருக்கு சொந்தமான சுஜாதா, டீர் ஆகிய கப்பல்களும், இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண என்ற கப்பலும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக கப்பல்களை வரவேற்றுள்ளனர்.
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர், எதிர்வரும் 19ஆம் திகதி இந்த கப்பல்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Related posts:
மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!
நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் - தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் ...
நள்ளிரவுடன் அவசரகால சட்டம் நீக்கம்!
|
|