கொழும்பில் ஆரம்பமானது சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி!

Sunday, May 27th, 2018

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி, இலங்கைஅபிவிருத்தி குழாம் அணி, இங்கிலாந்தின் விளையாட்டுக் கழக அணி, சிங்கப்பூரின் தேசிய வலைப்பந்தாட்ட அணி ஆகியன இதில் பங்கேற்கவுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அந்தப் போட்டிக்கான ஒரு முன்னாயத்தமாக இந்தப் போட்டியை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: