கொழும்பில் அமெரிக்க யுத்தக்கப்பல்!

Monday, July 25th, 2016
அமெரிக்கக் கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பல் நேற்று (24) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

ஈரூடக போக்குவரத்துத் தள யுத்தக்கப்பலான, யு.எஸ்.எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இதன் போது இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் 13ஆவது ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த இந்த யுத்தக்கப்பல் ஒரே தடவையில் 700 மரைன் படையினரையும், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டது.நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்தப் யுத்தக்கப்பலில், சிறிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் உள்ளன.

இக்கப்பலில் வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையினர், இலங்கை கடற்படையினர் 200 பேருக்கு மனிதாபிமான மற்றும் அனர்த்தகால உதவிப்பணிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: