கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தீ விபத்து!

Saturday, January 12th, 2019

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

4 தீயணைப்பு வாகனங்கள் 12 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் இரகசியமாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: