கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புது வருடத்தை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

Saturday, April 9th, 2016

புதுவருடத்தை முன்னிட்டு சித்திரைப் புதுவருடத்திற்கு முன்தினமான எதிர்வரும்-12 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விஷேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 12 ஆம் திகதி இரவு -10 மணிக்குக் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த விசேட ரயில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை காலை-6.30 மணிக்கு வந்தடையும். மீண்டும் ரயில் 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு -8 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை அதிகாலை 4.45 மணியளவில் சென்றடையும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வழமையாக இடம்பெறும் ரயில் சேவைகளில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது. இச் சேவைகள் வழமை போன்று நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: