கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு நேரடி  விமான சேவை!

Friday, May 5th, 2017

இந்தாண்டுக்குள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கொழும்புக்கு நேரடியான விமான சேவை ஸ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கான நேரடி சேவையை ஆரம்பிக்க நீண்டகாலம் திட்டமிட்டிருந்த நிலையில், அது விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வழியாக இந்தியாவின் தெற்கு முனையில் உள்ள சிறிய தீவுக்கு அதிக பயணிகள் செல்கின்றனர். இங்கு பயணிப்பற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை ஊடாக செல்வதே ஒரே நேரடி வழியாகும். இதற்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் சேவை வழங்கவுள்ளது.

இந்த விமான சேவை பல்வேறு திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.அதற்கமைய ஸ்ரீலங்கன் விமான சேவையினால் FlySmiles என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக நேரங்களை தெரிவு செய்யும் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

Related posts: