கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

Monday, December 25th, 2017

பண்டிகைக்காலத்தில் கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக்காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்பிரகாரம் இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை கனரகவாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மாலை வேளையில் வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டிகைக்காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: