கொள்கை தளராது தமிழ் மக்களின் விடிவுக்காக உழைத்துவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வவுனியாவில்  தோழர் திலீபன்!

Sunday, January 21st, 2018

தான் வகுத்துக்கொண்ட கொள்கையில் இறுதிவரை தளராது தமிழ் மக்களின் விடிவுக்காக நேரகாலம் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை மக்கள் ஒவ்வொருவரும் பலப்படுத்தும் போது, அதனூடாகவே ஒர் உயர்வான நிலையை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வவுனியா சமணங்குளம் ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வவுனியா மாவட்டத்தை பொறுத்தளவில் எமது மக்கள் செறிந்துவாழும் பல்வேறு பகுதிகளிலும் இயல்பு வழ்வை மக்கள் வாழமுடியாத நிலையிலேயே இருந்துவருகின்றனர். குறிப்பாக அவர்கள் நாளாந்தக் கூலிவேலை செய்தே தமது வாழ்க்கையைக் கழித்துவருகின்றனர்.

பாடசாலைளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பவதிருந்து அவர்களது போக்குவரத்து சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய அடிப்படை வசதி வாய்ப்புக்களைக் கூட  பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களது இவ்வாறான அவல வாழ்வுக்கு கடந்த காலங்களில் இந்த மக்கள் தெரிந்தெடுத்துக்கொண்ட தமிழ் அரசியல் வாதிகளும் காரணமாகவே இருந்துள்ளனர்

இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தமது குடும்பத்தின் கௌரவத்தையும் நலன்களையும் மட்டுமே முன்நிறுத்தி அதற்காகவே செயற்பட்டு வந்துள்ளனர் என்பது மட்டுமல்லாது தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்

ஆனால் இவற்றுக்கப்பால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எப்போதும் மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து பல்வேறு சேவைகளை வழங்கிவருகின்றார்

அதுமட்டுமல்லாது தான் வகுத்திக்கொண்ட கொள்கையில் துளியளவும் குறையாது தொடர்ச்சியாக மக்கள் மீது மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்படும் விதம் ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் ஒரு பேரிடியாக அமைந்தள்ளது என்பதே யதார்த்தம்.

அதன் அடிப்படையிலேயே இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: