கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ச – ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!

Thursday, July 8th, 2021

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொருளாதார கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில், குறித்த பதவி பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமையை அடுத்து, இந்த புதிய அமைச்சுப் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் கோட்டாபய ராஜபக்சதான் என அக்கட்சி கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி ஒருவர் இருமுறை போட்டியிடலாம் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவே இருப்பார் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: