கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எண்மான தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன ஆகியோர், துறைமுக துறைசார் அனைத்து அரச அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது, துறைமுக மற்றும் சுங்கப் பணிகளை, எண்மானமயப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களை விரைவாக பெற்றுக்கொள்ளல் மற்றும் சுங்க வசதிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்கான இயலுமை உள்ளதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிருமித் தொற்றால் மாணவன் உயிரிழப்பு - அனலைதீவில் சோகம்!
குண்டுவெடிப்புகளின் முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய இளைஞன்!
மிகவும் கடுமையான நேரங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் - சபையில் அமைச்சர் பீரி...
|
|