கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி திடீர் மரணம்!

Thursday, November 26th, 2020

கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி (ஓ.ஐ.சி) திடீர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.

இன்று காலை கொழும்பில் காலி முகத்திடலில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணமடைந்தவர் பசாரவில் வசிக்கும் 43 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹான கூறுகையில், ஓ.ஐ.சி இதய நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படும், என்றார்.

Related posts: