கொலை வழக்கு தொடர்பிலான விபரங்களை முன்கூட்டியே கசிவு!

Wednesday, September 28th, 2016

நாட்டில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதுடன், அவர்களது மெயில்களையும் திருடியுள்ளனர்.

இது சட்டத்துக்குப் புறம்பானதும், நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையில் தலையிடும் செயல் என தெரிவித்த அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாரத லக்ஸ்மன், பிரேமசந்திர உள்ளிட்ட தரப்பினரின் கொலை வழக்கு தொடர்பிலான விபரங்கள் சில ஊடகங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பதென்பது மிகவும் ஆபத்தான செயல் எனவும், இதற்கெதிராக சட்டத்தரணிகள் சங்கம் குரல் எழுப்ப வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Hemantha varnakulasuriya_CI.jpeg

Related posts: