கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள் – வவுனியாவின் பல பகுதிகளில் சுவரொட்டிகள்!
Tuesday, March 23rd, 2021“கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்” எனும் வாசகத்துடன் வவுனியாவின் பல பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகளை இன்று வவுனியாவின் பசார் வீதி, நகரசபை வீதி, இறம்பைக்குளம், குருமன்காடு போன்ற நகர்ப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதுடன் குறித்த சுவரொட்டிகளுக்கு நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம் உரிமை கோரியுள்ளது.
இதேவேளை இலங்கையில் சுமார் 24 இலட்சம் பேர் நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியும், இதற்கு தீர்வு வழங்குமாறு கோரியும் பொலன்னறுவையில் சுழற்சி முறையிலான போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டமானது 16 ஆவது நாளாகவும் இன்று சுழற்சி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று வருவதாக தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|