கொலைகளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுழிபுரத்தில் கவயீர்ப்பு போராட்டம்!

Sunday, November 22nd, 2020

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கனை பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்க் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த கவனயீரட்ப்பு போராட்டத்தில் கரலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிக்கையில் –

கடந்தவாரம் சுழிபுரம் மத்தி குடாக்கனையில் இரட்டைக்கொலை ஒன்று இடம்பெற்றது. அத்துடன் இப்பகுதியில் இதுவரை எட்டுக் கொலைகள் இடம்பெற்றுள்ளது.

இதற்கு காரணம் அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை என்பனவே. இது இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இதை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவே கொலையை கண்டித்தும் சட்டவிரோத மதுபான உற்பத்தி சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை என்பவற்றுடன் கட்டுப்படுத்தக் கோரியும் ஜனாதிபதி அவர்கள் இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

குறித்த கவனயிர்ப்பு போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முன்பதாக சுழிபுரம் சந்தியில் இப் போராட்டம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்ட போதும் பொலிசார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது பிரசன்னத்தை அடுத்து வலிகாமம் மேற்கு பிரதேச சபை வளாகத்தில் சமூக இடைவெளியைபேணி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts: