கொலன்னாவையில் பதற்றம்!

Wednesday, July 26th, 2017

கொலன்னாவை பிரதேசத்தில் தொடருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்ற காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச வானூர்தி தளத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் தொடருந்து, கொலன்னாவையில் இடைமறிக்கப்பட்டுள்ளது.கனிய எண்ணெய் பணியாளர் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் சிலரால் இந்த தொடரூந்து இடைமறிக்கப்பட்டுள்ளது. தமது பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவுபெறும்வரை தொடருந்தை விடுவிக்கப்போவதில்லை என, அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது அந்தப் பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை, அத்தியாவசிய சேவையின் கீழ், கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.இராணுவ ஊடகபேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: